ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
அந்த இதழ்களுக்கு மட்டும்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2023-01-29
வானம்பாடி (முஜா)
மெலிந்துதிரும்
புன்னகையின் மொழிகளை
அள்ளிக் கொள்கிறேன்

கலைந்த அதன் உருவம்
சிதைந்திடக் கூடாதென 
புலன்களை மேம்படுத்தி
குளிர்காலமொன்றை
கசியவிட்டு  வினாவுகிறேன்

அதுவும் கேள்விகள் முடம்பட
மொத்த ரசனையும்
பிழைத்துப் போனபிறகு,
தனக்கிந்த  மழைக்கரம்
தேவைப்படாதென
மனம் அதட்டுகிறது 

துயருறும் போது
வசந்தகால வளைவுகளைச்
சுரீரெனப் பூட்டிக்கொண்டு
சடுதியாய் உதிரும்
அந்த இதழ்களுக்கு மட்டும்
எத்தனை ஆயுதங்களோ!

வானம்பாடி.