எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
நேற்றைய சாட்சியங்களாய்..

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2023-01-27
வானம்பாடி (முஜா)


அதிகாரக் குறவர்களால்
சீரழிந்த தேசத்தின்
மூர்க்கத் தழுவல்கள்,
இயலாமையில்
போராட்டங்களாக

இருள் மேல் இருள் தைத்து
இருப்பை
இல்லாமல் செய்த  தீர்வுத்திட்டங்கள்
இன்றும் முதுகையே முறித்து நிற்க..

நேற்றைய குற்றமெல்லாம்
கூர்கண்களின் பார்வைத் தேடலென
கூச்சங்களின்றி சூழ்ச்சியால்
வெள்ளை அடித்தவன்

மீண்டும்,
தேடித் தெம்பிழந்த  உனக்கொரு
மாற்றம் தருகிறேனென
தேனொழுகப்பேசி
சுத்திக் காட்டுகிறான்
தேர்தல் காலமொன்றை

வலுவிழந்த கால்களின்னும்
வாதமுற்று
அடங்கிக் கிடக்குமா 
இன்னும்,
பசியோடு காத்திருந்தவன்  நீயல்லவா...!

உதைத்தெழு!
ஊழல் பெருச்சாளிகளின்
மூக்குடைபடும் 
நேற்றைய சாட்சியங்களாய்
மாற்றங்கள் தருவது
இனி நீதானே!

வானம்பாடி.