ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
ஊமை ஒப்பாரிகள்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2023-01-24
வானம்பாடி (முஜா)



உண்மைகளை வேண்டுமென்றே
காணாமலாக்கும்
உறவுகளின் நிலைமாற்றங்களை என்னவென்பது

உரத்துப் பேசவோ 
பிரிந்து போகவோ மனமின்றி
அவ்வப்போது 
அழுது துடைக்கும் ஆத்மா
கடக்க முனைகையில்

சொட்டு நின்று
தொட்டுக் காட்டிக் கேட்கிறது
இந்த ஏமாற்றத்தின்
விலாசங்களின்னும் நீளுமாவென

நான் மட்டும் எப்படி 
உறுதியளிக்க முடியும்
சுருக்குக்  கயிறுகளும்
எச்சரிக்கைக்  கழுத்தும்
திடுக்கிடும் திருப்பங்களோடு 
தினமொரு வியப்பளிக்கையில்

வானம்பாடி.