ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
எத்தனை காலம் காத்திருப்பது....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2023-01-11
வானம்பாடி (முஜா)
எத்தனை காலம் காத்திருப்பது....
-----------------------------

எத்தனை காலம்
உனக்காய் காத்திருப்பது
முன்னொரு பொழுதில்
முரண்பட்டுக்கொண்ட ஞாபகங்கள்

இப்போதெல்லாம்
அன்பாய் 
அவ்வப்போது சுயம் தொட்டு
ஆறுதல் வேண்டி நிற்க

அதன் வழித்தடங்கள் பற்றியே
நிபந்தனை விதிக்கிறாய்
நீயும்,
நிஜங்கள் மடிய
உருவம் வடிந்து கொண்டிருக்கும்
சாபமெனக்கு ,

வலிக்குமெனத் தெரிந்திருக்குமா உனக்கும் ,
நெருக்கி நெகிழ்த்தும்
தழும்புகளோடு
இன்னும்
எத்தனை காலம்
காத்திருப்பது உனக்காக.

வானம்பாடி.