சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
ஒருமுறை

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-12-19
வானம்பாடி (முஜா)
ஒருமுறை....

ஒரு முறை
உன் விழிகளுக்குள்
விரியும் விம்பமென வளரவே
ஆசை எனக்கு

தவித்துக் கிடப்பதும்
எழுவதும்
அவிழ்வதுமாய்
எதிர்படும் பொதெல்லாம்
நனைந்தொழுகின்றன
பார்வைகள் பழக முடியாதபடி

எப்போதும் சிதறிய வடிவங்களின் எச்சங்களை
எடுத்துக் கொண்டு கடக்கும் 
நீயும் நானும்,
 
ஒருமுறை
புனித  விம்பங்களின்
விருந்தோம்பலுக்காய்
ஓர்நாள் தேடிச் சம்பாதிக்கலாமே

அப்போதேனும்
ஒருபிடித் தனிமையையும்
விடைபெறும்  வரை
விழிகலையா விசாரிப்புக்களும் தவிர்த்து நிற்கட்டும்
எந்தன் விம்மலை.

வானம்பாடி.