சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
இயல்பாகிறாள்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-11-28
வானம்பாடி (முஜா)
நெருப்போடு விளையாடிக் கொண்டிருபவளுக்கு
நடைப்பயிற்சி தேவையென
உன் வாசல்வரை 
அழைத்துச் செல்கிறாய்

 உபசரிப்பில்
மறந்து போன கணங்களாய்
அவளும்,
அவளது பற்றுநிலை
அழகான சிறைகளாக

இரேன்
இன்பத்தை தருபவன் நீயென்றாலும் ,

பிரிக்க முடியாத குணங்களால்
தர முடிந்தது
நெருப்பில் நனைந்த
நந்தவனமொன்றின் சிதறிய
சுவாசங்களையே!
 

வானம்பாடி.