சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-11-21
வானம்பாடி (முஜா)
எனக்காக யாரும்
காத்திருக்க வேண்டாம்..

உயிரின் மூடியை
உடைத்து வெளியேறும்
சாகசங்கள் இனியும்
நிகழப் போவதில்லை..

எனவே தான் கூறுகிறேன்
எனக்காய்  யாரும்
காத்திருக்க வேண்டாம்,!

என்னைச் சுற்றி சுற்றி ஒடும் 
உங்கள் நினைவுகளை 
கடந்து விட்டு,
வெகு தொலைவில்
ஓடுகின்றேன் 
இன்னும்….
இன்னும்…. ,

ஆனாலும் நீங்கள் 
விடுவதாக இல்லை… என்னை

மீண்டும் கேட்கிறேன்
என் வெற்றிடத்தை 
பெரும் துயர் கொண்டு நிரப்ப
மறுபடியும் ,
வந்து போவாளென
அவகாசம் கொள்ளாதீர்கள்

ஒரு பெரும் பள்ளத்தாக்கொன்றில்
வெள்ளைத் துணி
போர்த்தப்பட்ட
உடல்போலவே  மனமும்

பிரிவைத் தயாரித்துக் கொண்டு
கிழிந்த தடயங்களின்றி
அழகாய்ப் படுத்துறங்குகின்றது

இனியும்  தேடி வரவோ
இல்லை,
காத்திருக்கவோ வேண்டாமே
இனியேனும் அமைதியாய் உறங்க விடுங்கள்!.

வானம்பாடி.