வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
சிரித்து பேசும் நண்பன்.

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2022-11-18
Visitor`s Post
சிரித்து பேசும் நண்பன்.

உள்ளத்தில் குரோதம் வைத்து
உருவத்திடம் தலையாட்டி பேசும்
நண்பனே! ஏனடா இந்த குரோதம்.

வஞ்சமில்லா பேச்சிலும் கள்ளமில்லா மனதிலுமே உனை சுமந்தேன் என் கனவுக்கு கரை சூசிப் போனாயே!

நொடிக்கு ஒரு முறை சிரித்து
நெருங்கி பழகி மகிழ்ந்து
முன் விட்டு பின் பேசும் புத்தி ஏனடா?

நுட்பமாக பேசி நுளம்பாக உறுஞ்சி 
ஒட்டுண்ணியாக வாழ்தாயே
எனை கழுத்தறுத்து போனாயே!

இன்றுதான் உணர்கிறேன் 
இயல்பாக விளங்கினேன்
இயலாத இதயமாகிப் போனேன்

நன்றாக சிரித்து பேசி மகிழ்த நீ 
நாடகம்தான் ஆடுகிறாய் என்ற பின்னும் இன்னும் ஏன் இந்த நட்பு. 

தூக்கி வீசுகிறேன் தூரப்போ
திரும்பி நீயோ வந்திடாதே
நண்பன் என சொல்லிடாதே! 

கவிப்பொய்கை 
ஜவ்ஸன் அஹமட் 

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)