ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
மாறுபாடே நீதான் மனிதனா...?

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-11-18
வானம்பாடி (முஜா)மாறுபாடே 
உனது பெயர்தான்
மனிதனா..

உறவு என்பாய்
உயிரென வளர்ந்து
உறுதிகள் தகர்ப்பாய்

இதயமென்பாய் 
இடைநடுவே 
இல்லாமலாக
இன்பங்கள் உடைப்பாய்

உதவிகள் புரிந்தால்
உலகமென்பாய்
உதவாமல் போனால் ,
உனக்கில்லை 
உள்ளமே என்பாய்

ஆசைக்கு இசைந்தால்
அகிலமென்பாய்
அடைவுகள் முடிய
அகமில்லா 
அறுகுணம்  நீயென்பாய்

புறங்கழுத்திலேறி
புகழ்ச்சிகள் புரிவாய்
காணமல் கடந்தால்
கஷ்டங்கள் கொடுப்பாய்

மாறுபாடே..
இனியும்  நீதான்
மனிதனென்றால்
மகிழ்வோடு கூறுகிறேன்
இனியும்
இதற்கு முன்னரும்
உனது வெளிகளில் நானில்லை.

 
வானம்பாடி.