எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
ஒரு கனவின் நம்பிக்கை....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-11-18
வானம்பாடி (முஜா)ஒரு சொற்பக் கனவுகளுடன்
இறுதி நாளை எண்ணியபடி
சயனமுறுகிறது காலம்

ஒடுங்கிக் கொண்டிருக்கும்
அதன் வழித் தொலைவுகள்
எளிய சூத்திரமொன்றை
எழுதிப் பார்க்கும் 
பேராவலோடு

நேற்றைய நினைவுகளும்
நிகழ்காலத் தூரங்களும்
கனங்களில்  வடிவம்பெற

இழப்பீடுகளை சமப்படுத்தும்
முயற்சியின் இடைவெட்டு
சற்றும் 
சுவாரஸ்யம் குன்றாது
 மீதமிருக்கும் பொழுதுகளை
 உயிரூட்டும்,
 
காலமே!.....நீ !
சாய்ந்து கொள்!
எனக்குள்ளிருக்கும் நம்பிக்கை எட்டல்கள் 
இன்னமும் தூங்கவில்லையென
கூறியபடி.

வானம்பாடி.