எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
குணம் ஒப்பாத கண்களின் பிடி...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-10-13
வானம்பாடி (முஜா)
உற்று மேயும் 
அந்தக் கண்களின் பிடி 
எவ்வாறு 
என்பதை அறிந்திருக்கிறாயா...?

இச்சையின்
நக்கல் தனம்  மிகைப்பட
பர்தாவின் ரூபம் 
அதை,
கிழித்துண்ண 
மன்னிக் கொண்டிருக்கும்  

கண்டதெல்லாம் 
உண்டு மகிழும்
அதன் எண்ணங்களும்
 உணர்ச்சிப் பெருக்கமும்
சுருங்கிக்கொள்ள முடியாதபடி
 மோர்ந்தும் தீண்டியும்
 இன்பங்களென ஊளைகளிட

குணம் ஒப்பாமல்
மொய்க்கும்  
அந்த விழிகளிலிருந்து
புழுத்து நெழிகின்றன
கடவுளின் கோட்பாடும்
கூடும் நாளொன்றின்
காட்சி விரிதலும்

வானம்பாடி.