ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
உதிரத்தில் முளைத்தவனுக்கு...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-10-01
வானம்பாடி (முஜா)
என் 
உதிரத்தில் விதையாகி முளைவிட்ட 
மென் தளிரென நீ!

இதே நாளில் தான்
என்னுலகச் சுருக்கங்கள்
உன்னைக் கண்டு
உயிர் கொண்டு 
உறவாடின

மலரவும் பின் 
 கருகவும் கூடாதென
இதுவரை  
உன்  எல்லைக்குள்
நிழல் வனமொன்றை
நட்டு வைத்திருக்கும் கதையை அறிந்திருப்பாயோ நான்
அறியேன்...

மகனே!
முழு உயிரும் கரைந்து 
உடல் கணுக்கள் மக்கிப்போனாலும்
உன் விழுதுகளை ஏந்தும்
முதுகெனவே  நானிருப்பேன்

முடிந்தால் 
உன் நிழல் வேண்டும் தருணங்களில்
அக்கறையோடு வழித்தடங்களில்
அழைத்துச் செல்

அப்போதும் ஆகச் சிறந்த
 நம்பிக்கையாக நீதான் இருப்பாய்..

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ஆருயிரே..

வானம்பாடி.