ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
அவசர கணங்களோடு...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-23
வானம்பாடி (முஜா)
புதைந்த நினைவுகளை ஓட்டும்
அவசர கணங்களாகவே
வாழ்க்கை

இருந்தாலும்,
வெறுந் தோல்களில் 
முளைத்துத் தொங்கும்
புன்னகையை ,
நெருடல்களின்றி 
கொஞ்சம் இறைக்கிவைத்து இளைப்பாறவும்.

அவ்வப்போது 
தொலைந்து போகும்
எனக்கோர் 
உருவம்  உள்ளதென
உயிரூட்டும்  
பரபரப்பின் விடுதலையுமாகவே 
அதன் 
அசைபோடுதல்.

வானம்பாடி.