ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
உடையா மௌனங்களோடு...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-23
வானம்பாடி (முஜா)
ஒரு மௌனத்தின்
பெரும் விசாலத்தைக் கடக்க
முயல்கிறேன்

அவை சில நேரம்
ஆத்திரமாய் 
அழுகையாய்
இன்னும் கொஞ்சம்
 பிடிவாதமாய் 
தனக்கொரு முகத்தை
விசாலித்து செல்கிறது

இருந்தும் 
நீயோ,
கூர்ந்து கேட்க முடியா
உள் ஆழத்தில் 
ஆளரவமற்று 
உறங்கிக்  கிடக்கிறாய்

வானம்பாடி.

ஆளரவமற்று - தனித்து