ஏனைய கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
உயிர்_குளத்திலிருந்து....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-13
வானம்பாடி (முஜா)
உயிர்_குளத்திலிருந்து....

இரவெனும்
உருவெளித் தோற்றத்தில்
ஆறுதல் அளிக்கிறது
வெயிலின் சிறுசயனம்

உயிர் குளத்தில்
உற்சாக வேரூன்ற 
நாளையும் அது
வானின் முகவழகை 
சிரத்தைக்கு உள்ளாக்கலாம்

இருந்தாலும்,
இருள் முனகும் பாதையில்
விழித்தெழும் 
அந்த மஞ்சள் கதிர்கள்  தான்  
அதனது  உயிரோட்டமென்றாக

சூழலை 
இடையுறாத் திரிகைக்குட்படுத்தி
 அச்சுறுத்தும்
அதிலிருந்து,
தப்பிக்க முடியாதபடி
உயிர் அழுத்த...

கொஞ்சம் 
மேகங்களைச் சேமிக்கின்றது வானம்
தன் எல்லை தாண்டியும் 
நிழல்மழை
பொழிய வேண்டுமென

வானம்பாடி.