எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
பார்வை நிலவி விரியட்டுமே...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-11
வானம்பாடி (முஜா)
பகலொன்றைத் தேடும்
இரவின்
இளமைக்கால  கனவுகள் போலத்தான் வாழ்க்கை

எப்போதும்
 விடியவேண்டுமென்ற
விழிநிறைந்த ஏக்கம்
அடம்பிடித்தபடி

இமைகளின் மேலமர்ந்து
இரவுக் கோப்பைக்குள் 
முளைவிட்டு வளர்ந்தெழும் நிலவையும்
பூத்துக் கிடக்கும் வெள்ளிகளையும் 
காணாது தடுக்க

இனி எஞ்சியிருக்கும் நாட்களிலும்
இரவின் சாட்சியங்கள் 
அதற்கு
இனிமை வழங்கப் போவதில்லை

பகலொன்றின்
 பழுத்த கணமோ 
 இல்லை  
 அதன்  முகம் சளித்து
 நிலவி விரிந்த பார்வை
 அன்னாரும் வரையிலோ..

வானம்பாடி.