சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
நழுவிக் கொண்டிருக்கும் மௌனத்திலிருந்து...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-11
வானம்பாடி (முஜா)

கிழிபட்டுக்  குலைந்து கொண்டிருக்கும்
ஒரு சிறு இதயத்தின்
பெருத்த உறுமலே அது...

நழுவிக் கொண்டிருக்கும்
மௌனத்தின்
ஆர்ப்பரிப்பும்
ஆவேசமும் தொட்டு
தொடர்ந்து கொண்டிருக்க

வர்ண விகாரங்கள்
கொஞ்சம் ஆழமாய்
இன்னும் கொஞ்சம்  விபரீதமாய்
ஊடுருவி  
உள்ஓடிப்பிறக்க வேண்டுமென

சீரழிக்கப்பட்டதொரு 
புன்னகைப் பிழம்பின் 
பெரும் சிதறலை, பகிரங்கப்படுத்தும் திரைமுக வார்த்தைகளே அவை

முடிந்தால்
அதன் தலைகீழ் ஆட்டத்தை
எதிர்கொள்!
இல்லையேல் 
ஓடி ஒழிந்து கொள்!

வானம்பாடி.