சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
இப்போதெங்கள் கால்களுக்கடியில் ...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-09-03
வானம்பாடி (முஜா)
இப்போதெங்கள்
கால்களுக்கடியில் ...
---------------------------------

ஓயாத அலையெழுப்பும்
சங்கீத தேசத்தின் சொந்தக் காரர்கள் நாங்கள்

குருத்த மணலும்
கொதித்தெழும் மீனும்
கரை தழுவும் அலைகளுமே எங்களின் உறவென்றாக..

வாடைக்காற்றின்
வசந்தம் கூட 
தனித்துப்  பேசுமே
எங்களது  ஊரின் வாசம்

நுரை சுமந்த
கடலோடும் அழகு பார்த்து
சுற்றிவரும் ஊரெல்லாம்
கரை வந்தே லயத்திருக்க

கொஞ்சி விளையாடிடும் நண்டுகளும்
சாலைவசதி
சிற்றூண்டிப் பூமிகளென
கண் மகிழும் காட்சிகள்
காணக் கொண்டாட்டங்களாக

காற்றும் 
தன் சலனம் தீர
எங்களின்
கரைதழுவியே மகிழ்ந்திருக்கும்.

இன்றோ,
படைதிரட்டி வந்து
அள்ளிக் கொண்டு போகும்
அலைக் கரங்கள்
கூவிக் கூவி  பயமுறுத்த

கடலோரத் தென்னை பனை
அத்தனையும் சுருட்டி விழும்
ஆழிப்பேரலையின்
ஆர்ப்பரிக்கும் அர்தங்கள்
குடிசைக் கதவு வரை

யார் செய்த வினை 
இதை நாம் சுமக்க..
இழந்தோம்! 
நாங்கள் இழந்தோம்!
கோடிக் காலங்கள்
கவி படைத்த
அலையின் குதூகலத்தை

இப்போதெங்கள்
கால்களுக்கடியில் மீண்டும் மீண்டும் 
பாவம் பாக்கா
அசுர அலைகளே!

# plz save Nintavur.

வானம்பாடி.