சமூகக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
சருகாகும் சரும தேசத்திலிருந்து..

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-08-19
வானம்பாடி (முஜா)

சருகாகும் சரும தேசத்திலிருந்து...

இளமை கொஞ்சம்
இளைப்பாறும் காலமிது
இருந்தாலும் 
காதல் கடிதங்களைச் சுமந்தபடி
காலம்  அவ்வப்போது 
முகவரிகள்  தேட

வேலிகளிட்டாலும்
விழி விரியப் பார்த்தே
யார் யாரோ 
எறிந்து விட்டுப் போகும்
வரிசை கலையா மடல்கள்
உயிரைக் கிழிக்கும் பேராயுதமாய்

மனம் ஒத்துழைக்க வில்லையென்றாலும்
கடந்து சொல்ல மறுக்கும்
அந்நெரிசல் கணங்கள்
இன்னமும் 
பிணக்காட்டினைப் போல 
இதயக் கூட்டை எரிந்தே மகிழ

ஒதுங்க இடம் தேடும் 
சுயமில்லா பேராசைப் பிடிவாதங்களுக்கு
இனியும் 
இந்த இறுக்கம்
புரியப் போகின்றதா என்ன..?

நாகரீகமில்லா
 அணைப்புக்களால்
நெடுந்துயர்ந்த இளமை
சொட்டுச் சொட்டாய் வடிந்தே 
காணாமலாக

சருகாகும் சருமத்து
பிணவாடை  
இப்போதேனும் 
மகிழ்சிப் படுத்தட்டும்
அவர்களை ,....

வானம்பாடி.