எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
இந்தக் கறுப்பு நாட்களில்...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-08-06
வானம்பாடி (முஜா)
இந்தக் கறுப்பு நாட்களில்...

கனத்த இருள் தின்னும்
இந்தக் கறுப்பு நாட்களில்
பிழைத்தலென்பது 
பெரும் அபத்தங்களென்றாக 

நெருக்கடியின்
நிர்பந்தத்துக்குள் இப்போதெல்லாம் 
பலநேரப் பசியோடும்

மீதி,
வரிசையில் நின்றே
ஏமாற்றங்களைச் சுவைக்கும்
பிழைத்தல்களுமென்றாக

வெறுமையை கையளித்துச் செல்லும்
மனவெளிகளின் 
வெண்தீயைப் பொருட்படுத்தாமல்

குரல்வளையை மிதிக்கும் 
ஆண்டைகளின்
அரியாசன  கெட்டித்தனங்களை
என்னவென்பது

வானம்பாடி.