எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
எழுத்தாளர்= போராளி

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-07-13
வானம்பாடி (முஜா)


ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு போராளி தான்.
தன் உணர்வுகளோடு போராடியே
தனிப்பெரும் படைப்பொன்றினை காட்சிப்படுத்துகிறான்.

அந்த போராளிகளின் இன்றைய நிலைதான் என்ன..?
தனக்கென ஒரு அடையாளம் கிடைத்தால் போதுமெனவும் தனக்கெதற்கு வம்பெனவும் இன்றைய சமூக சிக்கல்களையும் எதார்த்த வாழ்வியலையும்  தன் படைப்பில் கொண்டுவர மறந்தவர்களாக ஏதோ ஒரு கருப்பொருளை நகர்த்திப்போகும் அவர்களது பேனையின் கூர்மை பற்றி கொஞ்சம் சிந்திக்கவும் சற்று துலக்கிப் பார்க்கவும் தேவையான காலம் இது..

பொதுவாக இலக்கியம் என்பதை
 "காலத்தின் கண்ணாடி" யென்றே அழைப்பர்.
 அவ்வாறெனில்
எமது இலக்கிய பாண்டித்தியம் நாம் வாழ்ந்த காலத்தை சித்தரிப்பதாகத்தானே  அமைதல் வேண்டும்.

ஏன் இன்று விரல்விட்டு எண்ணும் சிலரைத் தவிர  ஏனையவர்களது படைப்புகள் தற்கால சூழ்நிலையை விபரிப்பதாகவும் .
எதிர்த்து கோசங்களெழுப்புவதாகவும் அமைவதில்லை.

அத்தோடு யாராவது ஒருவர் துணிந்து எழுதினால் அங்கு சென்று "எதுக்கு இந்த வேண்டாத வேலை நாளை உங்களையும் சிறையிலடைப்பர் கைதுசெய்வர்"
 என்ற பரிதாப வாசனங்களை பொழிந்து விடுபவர்களை தான் பெரும்பாலும் காண முடிகிறது.

இதுவா எமது சிறந்த பணி....?

 எழுத்தாளனின் கருத்து/சிந்தனைச் சித்தரிப்புக்களால் ஒரு நாடோ சமூகமோ சிறப்பாக இயங்கும் என்பதே உலக வரலாறு.
உலகின் அனைத்து விடுதலைப் போராட்ட சிந்தனைகளும்   பேனையின் துடிப்பில் பிறந்ததுவே,

இன்று  இந்த நாடு எதிர்நோக்கும்
சவால்களுக்கும் விட்ட
 பெரும் பிழைகளுக்கு ஒரு காரணம் நாமென்றே கூறுவேன்;
 தட்டிக் கேட்க வேண்டிய சில காலப்பகுதியில் நெஞ்சை நிமிர்த்திக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் ஆட்சியாளனும் திட்டங்களில்லா அமைச்சரவையும் கண்விழித்திருந்திருக்கும்.

ஒரு கை தட்டுவதை வேடிக்கை பார்த்த காலங்கள் மாறட்டுமே.
சேர்ந்து குரல் கொடுங்கள் 
உங்கள் சிந்தனை ஒரு நாட்டையோ ஒரு  சமூகத்தையோ அல்லது ஒரு தனிநபரையோ
புத்தியில் குட்டி  நிறைவுபடுத்துமாயின்,

அதுவே ஒரு  எழுத்தாளனின் வெற்றி உன்னத வெற்றி.

குறிப்பு : பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து மௌனமாக கடக்கவும்