வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
உறவுகள்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2022-05-28
Visitor`s Post
           #உறவுகள். 
வளைந்த கோடுகள் 
நெளிந்து முடிந்து
நேராகும் போது 
நெருக்கங்கள் தேடி
சில உறவுகள் 
வரிசையிலே, 

சுறுசுறுப்போடு 
உலாவிய நேரம் 
வெறுத்து ஒதுக்கி
வேறுபாடு காட்டிய 
சொந்தங்கள், 

கருத்துக்கள் சொல்ல 
அழைத்து; கருணையே 
இன்றி கதைத்து; 
மாறி மாறி வசை 
பாடிய உறவுகள், 

சேர்ந்து போக எத்தனித்தும்
நீ வேறு நான்
வேறு என 
பிரிவினை செய்து
ஒதுக்கிய 
சகோதரங்கள், 

இனி நானே இல்லை 
என்றாகிட மன்னிப்புக் 
கேட்டு மன்றாடிக் 
கொண்டு முண்டி 
அடித்து தேடுகிறார்கள். 
முட்டியிட்டு 
அழுகிறார்கள்.

#கவிப்பொய்கை

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)