வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
உள்ளத்தில் உண்டானவை

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2022-05-22
Visitor`s Post
உள்ளத்தில் உண்டானவை.

நல் மனிதர்கள் 
பிடித்திடும்
நல்லுறவை 
பேணி நடந்திட
பிடித்திடும், //

எழிலுரு இயற்கை 
பிடித்திடும்
அதை இரசித்திட
மிகப்பிடித்திடும், // 

குயிலும் பிடித்திடும் குயிலோசையும் 
பிடித்திடும், //

மயிலும் பிடித்திடும் 
அது அகவும் அழகும் 
பிடித்திடும், //

தாமரை மலர்கள் 
பிடித்திடும் 
அது தனித்து 
நிற்ப்பதும் 
பிடித்திடும், //

நீண்ட நதிகள்
பிடித்திடும் அதில் 
நீந்தி மகிழ்ந்திட 
பிடித்திடும், //

நீல வானம் பிடித்திடும் 
அதில் மணிக்கணக்கில் 
பறந்துதிரிந்திட
பிடித்திடும், //

தாய் மடி பிடித்திடும்
அவள் தலை தடாவுதல் 
பிடித்திடும், //

உறவுகள் பிடித்திடும்
மணிக்கணக்கில் 
உறவாடிடப்பிடித்திடும், //

வாய் விட்டு சிரித்திட 
பிடித்திடும் வஞ்சமின்றி 
வாழப்பிடித்திடும், //

மழலைகளுடன் சிரித்து விளையாடிட பிடிக்கும் 
சில நொடி நானும் 
மழலையாகிட பிடித்திடும், //

நீண்ட பயணங்கள் 
பிடித்திடும் நீங்காது
நினைவலையில் 
இரசித்திட பிடித்திடும், //

சின்னச் சின்ன 
குறும்புகள் பிடித்திடும் 
அதை குற்றமென 
கொள்ளாமை 
பிடித்திடும், //

அன்பான உறவுகளை 
அரவணைக்க பிடித்திடும் 
அக்கனமே பரஷ்பரம் 
அன்பை பரிமாறப் 
பிடித்திடும், //

பண்பு,பணிவு,கருணை 
கொண்டு வாழப் பிடித்திடும், 
பண்பற்று,கரவம் கொண்டு, 
கருணை இன்றி வாழ்ந்திட 
பிடித்திடாது,//


✍🏿 
கவிப்பொய்கை

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)