எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
அமைதியாக எரியுங்கள்..

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-05-12
வானம்பாடி (முஜா)
எரிந்துப் போட்ட 
தீச்சுவாலைகள்
பற்றியெரிய
எரித்தெடுக்கின்றன
 இளந்தாரி வெயில்கள்

இருங்கள் 
இருண்டுவிடாதீர்கள்
நாட்டை அறுத்த எலிகளையும்
உறிஞ்சிக் குடித்த வேதாளங்களையும்
தேடித்தானே உங்களது வேட்டைகள்

நிதிக்கு விலைபோன
நீதியும்!
கேடிகளின் கோடிகளுக்கு விலையான வாழிடங்களிலுமே
உங்களினதும் எனதும்  
 போராட்ட தளங்களாக

விடியல் வேண்டுமென்றே
வெளிச்சம் கொடுக்க வந்த 
நோக்காட்டுக் கங்குன்களே!

வானம் இருண்டதென
வழிதெரியாப் போக்கனாகி
மிதித்த வாசலில் 
சுதந்திரக் கீதம் இசைக்காதீர்கள்
புரிந்துகொள்ளுங்கள்

நம்பிக்கை தாழாத
எமது பார்வைத் தூரங்கள்
இந்த அரசியல் குப்பைகளை மட்டுமே
பொறுக்கி யெறிக்கட்டும்
அமைதியாக..

வானம்பாடி..