எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
தயவுசெய்து விடைபெறுங்கள்,...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2022-04-26
வானம்பாடி (முஜா)
தயவுசெய்து விடைபெறுங்கள்,...

காண அரிதான 
அந்த போராட்ட பூமியின்
மீதில் நின்று தான் 
எங்களின்  கூச்சலிடுகை

ஒரு நீண்ட புதைவில்
உறங்கிக்  கிடந்த 
களைப்பும்
காத்திருந்த உள்மனது ஆதங்கங்களும் 
அதிர்ந்தே பிளக்கும் கனவென்றின்
விதையீட்டளாக

தன்னிலம் தாழாமல்
வளம்கொழித்து
நாலா புறமும் பெருக்கெடுக்கும்
நீர்சுனைகள் போன்ற 
தலைமைகளோடு 
தாய்நிலம் மலர வேண்டுமென

கண்விழித்தபடி 
பெரும்யாகம் புரிகின்றது,
விட்ட பிழைகளை 
சீர்திருத்திக் கொள்ளும்
அந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்திற்காய் 

இருளில் புதையுண்டு கிடந்த
எண்ணற்ற 
மனக்குரல்களை குவித்து
கோஷப் புயலில் கலைந்து போங்களென
பறைகள் அடிக்கின்றோம்
 
அப்போதுமெங்கள்
கனம் இழந்து
நா வற்றி
விடுதலைமுகங்கள் 
மாறைய வேண்டுமென
நாற்காலி போட்டரமரும்
குழிநிலத்தின் 
நெருக்கடிகளாய் அவர்கள்

விழிமழை நனைத்தே கேட்கின்றோம்
பிறந்த மண்ணை
பெரிதுவர்க்கும்
எங்களின் 
தூய சிந்தனையை ஆதரித்து  
தயவு செய்து விடைபெறுங்கள்!

நாளையாகினும்
வடிச் சுமைகூடிய
எங்கள் சுலோகக் குரல்கள்
தளிர் விட்டு
பிழைத்து நிற்கட்டும்!
புதுசுகம் காணட்டும்!

Gotta Go Home....

வானம்பாடி.