வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
ஆண்மனம் மணம்.

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2022-03-12
Visitor`s Post
      ஆண்மனம் மணம். 

அண்டமே அடங்கிப்போகும் 
ஆண்மையின் அணைப்பில் 
அகிலமெங்கும் நறு மணம் 
கமழும் இவன் துடிப்பில். 

பெண்மை பெயர் பெற்றுப் 
போக தாய்மை என தரணி 
வாக சூட ஆண்மையின் தியாகம் 
அறுபதிலும் ஓய்வதில்லை. 

மாறி மாறி வசை சொல்லி 
வஞ்சனைகள் பல சொல்லி 
கூடிக்கூடி கதைத்தாலும் 
பிழையாய் நூறு பெயர்கள் 
சொன்னாலும் ஆணவனின் 
பொறுப்பு நீங்கிடவும் இல்லை. 
அவன் உழைப்பின்றி தூங்கிடவும் இல்லை. 

வெள்ளை மனம் கொண்டவன், 
பிள்ளை குணம் உள்ளவன், 
வேதனைகள் உள்ளபோதும்
மிரண்டிடாமல் நிற்பவன்,
சோதனைகள் வந்தபோதும் சாதனைகள் செய்பவன். 

இராப்பகலாய் ஓடி ஓடி 
இயன்றவரை உழைத்து, 
குடும்பம் நிலைத்திட, அகிலம் போற்றிட ஐக்கியமாய் பார்ப்பவன் 
அத்தனையும் காப்பவன் - ஆண்மகன்

சில நேரம் அவன் சினம் கொண்டு பாய்ந்தாலும் மனதால் என்றும் மணப்பவன், ஈகை குணமும் இரக்க மனமும் சொரிபவன், ஈன்றாளை கடைசிவரை கைவிடாது அணைப்பவன். 

மாற்றாளின் கரம்பிடித்து பொறுப்புகள் கூடிவர அரவணைத்து அன்புகாட்டி பாசத்தில் உறையவைத்து பத்திரமாய் காப்பவன், முதல் பிள்ளை அவளென்று அகம் புறம் கோணாது தாங்கிப்பிடிப்பவன். 

தாய்மைக்கு இடம் கொடுத்து காவலாய் வேடம் கொண்டு தரணியிலே இராப்பகலாய் காப்பவன் ஆண்மகன்.

 Jawsan Ahamed. 

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)