வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
பெண்ணினம்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-11-04
Visitor`s Post
          பெண்ணினம்.

மண்ணுலகில் பெண்ணினமே பாவப்பட்டது ஏனோ... 

காலங்கள் செய்த கோலங்கள் இதுவோ! 
கறைபடிந்த கசப்பான நினைவுகளை கொடுத்தது. 

போற்றப்படும் பேதைகள் இன்று தூற்றப்படும் சாதிகளாய் போனதுவே. 

மாற்றானின் கரங்களில் விலை பொருளாய் மாறியது. 

ஈன்றானின் இல்லங்களில் இம்சையாய் போனது.

உற்றாரின் உறவுகளில் மதிப்பின்றி போனதுவே. 

சமூகம்.... 

"மலடி" என்ற பட்டம் கொடுத்து மாண்புகள் அத்தனையும் மறுத்தனர். 

"வாழா வெட்டி" எனும் பெயர் சூட்டி வசைகள் பாடினர். 

"அனாதை" என்று சொல்லிச் சொல்லி அந்தஸ்த்தும் போக்கினர். 

"விபச்சாரி" எனும் முத்திரை குத்தி முடக்கினர், ஒதுக்கினர். 

அவமானங்கள் அறங்கேறின ஆசைகளும் அலை மோதின.

இத்தனைக்கும் பெண்ணவள் திடசாலி எனலாம்.


(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)