வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
இளவரசி

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-11-04
Visitor`s Post
             இளவரசி

நீ என் கண்ணழகி....
கோகுலத்தின் சொல்லழகி... 
மதிமுகத்தில் பேரழகி...... 
பின்னழகு நடையழகி..... 
பெயர் பெற்ற உலகழகி..... 


வர்ணனைகள் அத்தனையும் இவள் அழகில் தோற்றிட,
உவமானம் சொல்லி மெருகூட்ட இயலேன்.... 


சாதிக்கப் பிறந்தவள்
சரித்திர நாயகி...
சாதனைகள் அத்தனைக்கும் சமமாய் போனவள்...

என் காதல் ஏற்றவள்...
என் துன்பம் துடைத்தவள்....
எனக்கென்று வாழ்பவள்....
என் மடியில் சாய்பவள்...

மாயவித்தை கற்றவள்....
மன்மதனின் மனைவி....
மனதாற என்னுள் ஒன்றித்து போனவள்...

இவள்தான் என் இன்ப இளவரசி...

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)