வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
தெனமும் ஒன் நெனப்பு.

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-09-07
Visitor`s Post
     தெனமும் ஒன் நெனப்பு.

எப்படி மறப்பேன் நன் உன்னை இலகுவில் எப்படி மறப்பேன்.

நினைவலைகளில் நீங்காத நினைவு தந்தவள் நீ அல்லவா...... 

உன்னை நான் தாங்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் எழுதுகிறேன் தினமும் ஒன் நெனப்புதான் அம்மா....


வளர்பிறையாய் நான் வயிற்றில் வளர தேய் பிறையாய் தினம் தினம் மன்னில் கரைந்தவள் நீ தெனமும் ஒன் நெனப்புதான் அம்மா......


உன் உயிரில் பிணை கேட்டு என் உடலுக்கு உயிர் தந்த உத்தமியே அனுதினமும் உன் நினைவுடன்தான் நான்..

ஆயிரம் உறவுகள் பாசத்தை மழையாய் பொழிந்திட உனதன்பிற்கு ஈடேதம்மா. 

பாசமாய் பருகிட உதிரமே தந்தாய் பத்தியமாய் உறங்கிட மடியும் தந்தாய் தெனமும் ஒன் நெனப்புதான் அம்மா.... 

கடல் கடந்து நான் வாழ்ந்தாலும் கனவிலும் நினைவிலும் தெனமும் ஒன் நெனப்புதான் அம்மா...... 

கடைசி நேரத்தில் உனதருகில் நான் இல்லை என்ற ஏக்கம் என்னில் நீங்கியதாய் இல்லை.....

என் வெளிநாட்டு வாழ்க்கைப் பயணத்தில் உன் கடைசி உபதேசம் கண்கலங்க வைத்தது.

நீ மார்போடு அணைத்து நெற்றிப் பரப்பில் பொழிந்த முத்த மழை என்றும் நீங்கா நினைவலையாய்.

என்றும் மறவா தெனமும் ஒன் நெனப்புதான் அம்மா.....


*_கவிப்பொய்கை_*
*_-ஜவ்சன் அஹமட்-_*

(_கவிப்பொய்கை_ _-ஜவ்சன் அஹமட்-_)