வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
காதல் கீதம்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-09-07
Visitor`s Post
காதல் கீதம்.

சேலை கட்டி
மாலை நேரம் 
சாலை ஓரம் 
என்னவளை கண்டேன். //

போக்கு வெயில்
அவள் மேனி பட 
இலங்கியது 
அவள் தேகம். //

அவளின் திக் என்ற பார்வைஎன்னை 
திகைக்க வைத்தது.//

செயற்க்கை சாயமிட்ட
உதடுகள் செந்தாளம்
பூவாய் மலர்ந்தது.//

நடையோடு  
இடையும் மெல்லிடையோடு கருங்குழலும் 
நாட்டியமாடிட  
மென் முலையோடு எடை சாகாசங்கள் செய்தன.//

நானும் நோக்க அவளும் 
நோக்க கண்கள் இரண்டும் காதல் செய்தன.//

என் விழிப் பாதை
நீங்கவில்லை, 
சாலையிலே எவருமில்லை,
என் பாங்கி அவள் 
ஒப்பனைக்கு இப்
பாரினிலே அழகியில்லை.//

என்னவளின் 
கட்டழகை 
என்னவென்று சொல்வதம்மா.//


கவிப்பொய்கை
-ஜவ்சன் அஹமட்-

(Jawsan Ahamed )