வண்ணம்சேர்த்த தூரிகைக் காதலர்கள்... | நீங்களும் எழுதலாம்....
என் இனியவள்

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
கவிதை என்­பது உல­கத்தை இணைக்­கக்­கூ­டிய ஒரு திற­வு­கோல்

இந்த வானம்பாடியின்
சிற­கு­கள்
உங்கள் கவிதைப் புத்­த­கத்தை
சுமக்கும் அவாவோடு..

நீங்களும் எழுதலாம்..
வாருங்கள்.....
தமிழ் மற்றும் கற்பனை
ஆர்வம் உள்ள
என் வாசகனுக்கான
தளமே இது...
2021-07-24
Visitor`s Post
என் இனியவள்

அன்பானவர்களின் சிறு மௌனம் கூட மனதை ரணமாக்குகிறது.

எப்போது பேசுவார்கள் என்ற ஏக்கத்தில் உள்ளம் உறைந்து கிடக்கிறது. 

சிறு குறுஞ்செய்திக்காக நான் ஏங்கிய நொடிகள் எனக்குள் உணர்த்தியது வாழ்க்கை பயணத்தின் கறைகளை. 

அவளின் விடாப்பிடியான தூய அன்பில் பல தசாப்தங்கள் வீறுநடை போட்ட என்னால் இயலவில்லை அவளின் மௌனங்களை சகித்து வாழ.

அன்று என் பேச்சுக்களில் இனிமை கண்டவள் இன்று என் வார்த்தைகளை வெறுத்து ஒதுக்குகிறார், என் பிரிவிற்காக அதிகம் அவா கொள்கிறாள்.

அன்று நீ மட்டும்தான் எனக்கு என்று முன் மொழிந்தவள் 
இன்று அனைத்திலும் வேற்றுமை யோடே பார்க்கிறாள். 

என் வாழ்க்கைப் பயணத்தில் யான் பெற்றிராத அன்பின் மொத்தத்தையும் அள்ளித் தந்தவர் என்னவள்.

என் இதயத்தில் ரீங்காரம் இட்டுச்சென்ற அவளின் புன்னகையும் அவளின் கண்கள் பேசிய காதல் வார்த்தைகளையும் நினைக்கையில் கண்கள் குளங்களாகிறது.

மரணத்திற்கு முன்னமே மரண வேதனை யையும் வலியையும் பெற்றவன்
யான்


_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_

(Jawsan Ahamed )