பயணங்கள் | என்னைப் பற்றி
கவியரங்கில் ஒரு கவிதை....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-30
வானம்பாடி (முஜா)
இது எனது கன்னிக்கவியரங்கு....
மற்றும் ,
கடல்பறவைகளோடு ஐக்கியமாகிய
எனது முதல் பயணமும்...


இது என்னால் வாசிக்கப்பட்ட
மகளிர்தினக்கவி...
-+++++++++++++++++

படைத்தான் இறைவன்
தன் கருணையை இப்பூவுலகில்..!! 
பெண்ணெனும்
பொறுமையின் பொக்கிஷத்தை...!! 

வாக்கப்பட்டவனையே 
வாழ்நாள் முழுதும் நெஞ்சில்
சுமக்கும் உத்தமி..!!

குழவி ஒன்றைக் கண்டெடுக்க 
மரண வாசலை முத்தமிட்டே 
மறுஜென்மம் எடுக்கும் இறைவி.. .!! 

தாய் என்றும் தந்தை என்றும்
தன் வாழ்க்கை வட்டத்தில்
அன்பை  விதைக்கும் தேவதை...!! 

பாசத்துக்காய் 
தன் விருப்பங்களையும்
நேசங்களையும் தூரத் துரத்தும் தியாகி..!! 

ஆண்மையை போற்றும் உலகமே கொஞ்சம் திரும்பிப்பார்..!! 
எங்களைப்  போற்றாவிடினும் பரவாயில்லை.. 
பெண்மையைத்  தூற்றாதே. .!!

தலை குனிந்தே பல 
தலைமுறைகள் தொலைத்தவள்..!! 
தடம் பதிக்க துடிக்கிறாள்
தட்டிவிடமால் புத்துயிர் கொடு  ..!! 

ஆயிரம் திறமைகள் அடுப்படியில்
எரிந்து சாம்பலாக
அடுக்களையில்
ஜடமாய் கிடப்பவளுக்கு
இன்றாவது கொடு
புதுச் சுதந்திரச்சிறகு ..!! 

மனிதமே வா!! 
வந்து
மனிதன்  விதைப்பவளை 
வாழ்த்திச் செல்...!!