பாதச் சுவடுகள் | என்னைப் பற்றி
மகிழ்வுடன் நன்றிகூறக் கடமைப்பட்டவளாக...

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-20
வானம்பாடி (முஜா)
மகிழ்வுடன் நன்றிகூறக் கடமைப்பட்டவளாக...
---------------------------

இன்று (2021.01.20)
கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய பிரதேச இலக்கிய விழாவில் எனது கவிதை முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. ( அல்ஹம்துலில்லாஹ்)

இதன்போது
நிந்தவூரின் எதிர்கால கலைஇலக்கிய செல்வங்களான
மாணவர்களையும்,  
சக  இலக்கிவாதிகளையும் 
மகிழ்ச்சிப்படுத்தி உற்சாகமூட்ட
இந்தப்போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட
படைப்பாளர்களின்  ஆக்கங்கள்

" நிந்தபதி உதயங்களின் இலக்கியம்"

எனும் பெயரில் நூலுருப்பெற்று
வெளியிடப்பட்டது.

கொவிட்19 -இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் 
மிக அழகாக விழாவை சிறப்பித்து ஏற்பாடு செய்த ..
நிந்தவூரின்
கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் மற்றும்
கலச்சார அலுவல்கள் திணைக்கள
உத்தியோகத்தர்கள்,
இதற்காக உழைத்த நிந்தவூர் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும்
எனது மனம் நிறைந்த நன்றிகள் பல...