பாதச் சுவடுகள் | என்னைப் பற்றி
வரிகள் பெற்றுத் தந்த பரிசுகள்....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
2021-01-05
வானம்பாடி (முஜா)

சிகண்டி
--------------

சிகண்டி வார்த்தை வரிகளுக்குள்
கட்டிப்போட முடியா வலிகளின்
ஆவேசம் அவள்...!!!

காசி மன்னனின் புத்திரி
சல்வானை மனதால் 
மணம்கொண்டு
சுயம்வரத்திற்காய் காத்திருந்த 
சிங்காரக் கனவுகளின் ராணி...!!!

கரம்பற்றிக் கவர்ந்துசென்று 
இடைநடுவில் கைவிட
மனம் கொண்டவனையும்
பிறந்த மனையையும் 
துறந்தாள்
அபலை அம்பா ...!!!!

பாஷுதா நதிக்கரையில் 
பன்னிரு வருடங்கள்
கடுந்தவம் புரிந்து 
அக்கினிக்கருப்பனினதும்
அர்த்தநாரியினதும் 
மாசுறா அருளைப் பெற்றவள்

எடுத்தசபதம்  முடிக்க 
தன்னையே தீ மூட்டி அளித்த 
வெஞ்சினம் கொண்ட அம்பை 

அவள்...

ஆறாத சபதக்காரி 
பிறப்பெடுத்தாள்
பாஞ்சால மன்னன்
திருபதனின் நாமகளாகளென

வெஞ்சினத் தீ 
கொழுந்து விட்டெரிய 
பெண்ணாய்ப் பிறந்த
சிகண்டினி
ஆணாக உருவெடுத்தாள்
ஸ்தூணனனால்...

பீஷ்மரின் கோபத்தனலும்
நிதானமின்மையும் உருவாக்கிய
உயிர்பறிக்கும் அஸ்திரம் -இவள்
பாண்டவர்கள் வெற்றிபெற
தேவவியூகமானாள் 

இச்ச மரண யோகியை 
மண்ணில்சரிக்க
அர்ஜுனனின் தேரில்
அவனுக்கு முன் நின்ற
துருப்பச்சீட்டு

வீழ்த்தமுடியாத கங்கையின் மைந்தனை 
வீழ்த்தும் சபதத்தில் வென்றாள் சிகண்டி...!!

வானம்பாடி (முஜா)