எழுச்சிக் கவிதைகள் | என் சொற்சித்திரங்கள்..
தீக்குளிக்கும் நீதிதேவதை....

இது ஒரு வானம்பாடி பாடும் கானங்கள் கவனமாகக் கேளுங்கள்..!! உங்கள் வருகை என்னைக் கெளரவ்படுத்தும் என்பதால், உங்கள் வார்த்தைகளால் வண்ணம் பூசுங்கள் எனக்கும்...
Admin
22/12/2020
வானம்பாடி (முஜா)

நம்பிக்கை குலைந்த
நீதிமன்றத்தின்...
கவனயீர்ப்புப்  போராட்டமே
அறத்தாயின் தீக்குளிப்பு..


குற்றங்கள் குதூகலிக்க
ஆளுக்கு ஏற்றாப்போல 
நீதியும் நியாயமும்
தேசத்தைத் துகிலுரிக்குது


நீதித்தேவதையின்
கற்பைக் காவுகொண்டு
அறச்சுவட்டை புறம்தள்ளிய
எழுதுகோல்
தவறிழைத்து தடம்பிரள


புதிதுபுதிதாய்க் குற்றங்கள் 
முளைப்பது கண்டு 
மூட்டும் வெந்தணலில் வழக்காடி

அநீதியை எரித்து


குற்றங்களின் வேரறுக்க
நியாயத் தராசுடன்
நிமிர்ந்து நிற்கிறாள்
நீதி தேவதை...வானம்பாடி ( முஜா)