வீழ்ந்துபோன
சந்தோஷத்தின்
முகவரியாய்
தீர்ந்துபோன
நினைவுகளின் மிச்சமாய்
உங்களின் விழிகளுக்கும்
ஓர் நினைவு....
தோற்றுப்போய்
ஆண்டுகள்பல கடந்தும்,
காயத்தின் ஆழத்தில்
இன்னும் அதே
வேதனையின் முனகல்
போலியாய்ச் சிதறவிடும்
புன்னகைகள் எல்லாம்
வாடிப்போய்
உஷ்ணப்பூக்களை
ஈன்றெடுக்க
நெருப்பை உண்டு
கண்ணீரைக் குடித்து
நீண்டு கொண்டிருக்கும்
இதயம் சிந்தும்
கண்ணீர்ச் சொற்கள்
விழியோறமாய்....
வானம்பாடி ( முஜா)
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.