சொல்லும் கருத்தும்
சிந்தையைப் பிசைய
காலத்தின்
கறைகளைக் கொய்யும்
மாயக்குயத்தியாய் நான்..
தமிழின் திமிரில்
தன்மானம் விதைத்து
பாவக் கதைகளை
பாடையில் ஏற்றி
விரல்களால் வரையும்
மாற்றங்களின் குரலாய்
சொற்களின் வெம்மை
காதுகளை அறைய
நேர்படப் பேசி
நேர்மைகள் பேணி
ஆர்படை வந்தாலும்
அஞ்சாது முழங்கிி
செழுமைத் தமிழில்
சிந்தையைக் குடைந்து
ஓசைநயத்தில்
சீர்கள் பிடித்து
அளந்துகொட்டி
அளவோடு பதித்து
எழுத்தின் ஆட்சி
இதயத்தை நேசிக்க
மயக்கும் அழகில்
மாயங்கள் புரிந்து
தொடைகள் பயின்று
தொன்மைகள் களைய
அடுக்கி அடுக்கித் தொடுக்கிறேன்
புதுத் தளைகள் நட்டு....
மானுடம் அது
மனதால் செழிக்க..
வானம்பாடி ( முஜா)
© 2023 ThoorigaiKadhal. All Rights Reserved
Solution by
Syntaks.